இன்று (02.06.2021) காலை கோதையார் பகுதியிலுள்ள சிலோன் காலனி என்ற மலைவாழ் கிராமத்திற்கு சென்று அங்கு தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 48 குடும்பங்கள் மற்றும் ஆண்துணையற்ற குடும்பங்கள் உள்ளிட்ட 80 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ரூபாய் 46,000/- செலவில் வாங்கி வழங்கப்பட்டது.
நிகழ்வில் நீதிமன்ற தோழர்கள் பெஞ்சமின் ஜோஸ், சிவபத்மன், அபிஷேக், ஐவர், பெபின், முருகன், சஜித், சுகேஷ் மற்றும் களியல் கிராம நிர்வாக அதிகாரி திரு. ஷிபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு நடைபெற நிதியுதவி அளித்த கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை நண்பர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட நண்பருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
முழு அடைப்பால் பாதிக்கப்பட்ட கீரிப்பாறை வன சரகத்திற்குட்பட்ட கூவைக்காடு என்னும் பகுதியில் உள்ள 50 ஏழைக் குடும்பங்களுக்கு இன்று (05.06.21) பலசரக்கு பொருட்கள் மற்றும் காய்கறிகள் நமது நீதித்துறை ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியிலிருந்து ரூ. 28000/- செலவில் வாங்கி வழங்கப்பட்டது.
நிகழ்வில் நீதித்துறை தோழர்கள் பெஞ்சமின் ஜோஸ், சிவபத்மன், அபிஷேக், ஐவர், வினாயகம், முருகன், ராஜேஷ், கோபி மற்றும் அழகியபாண்டிபுரம் ரேஞ்சர் திரு. மணிமாறன் மற்றும் காவலர் திரு. வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு நடைபெற நிதியுதவி அளித்த நீதித்துறை நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று 12.06.2021 குலசேகரம் வன சரகத்திற்குட்பட்ட குற்றியாறு என்னும் மலைவாழ் கிராமத்திலுள்ள நலிவடைந்த 65 குடும்பத்தினருக்கு நமது ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி ரூபாய் 36725/- செலவில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்கி காலை 10 மணிக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நண்பர்கள் ஜோஸ், சிவபத்மன், அபிஷேக், ஐவர், சஜித், சுஜித், விஸ்வநாதன், வினாயகம், முருகன், கோபி மற்றும் குலசேகரம் வனசரக காவலர் திரு. ரெஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு நடைபெற நிதியுதவி அளித்த கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் திருவாரூர் மாவட்ட நீதித்துறை நண்பர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏
இதுவரை 195 மலைவாழ் குடும்பங்களுக்கு நமது துறை நண்பர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி ரூ.1,13,000/- செலவில் உதவி செய்யப்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.