தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி

நீதித்துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி தமிழகம் முழுவது உள்ள தற்காலிக பணியாளர்களின் பட்டியல் மற்றும் அதற்கான மனுவை நமது மாநில தலைவர் தோழர் செந்தில்குமார் அவர்கள் தயார் செய்ததை தற்போதைய கரோனா தொற்று மற்றும் தேர்தல் காரணமாக முதலமைச்சரை சந்திக்க அனுமதிக்க கோரி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு பார்கவுன்சில் முன்னாள் தலைவர் திரு. சந்திரமோகன் அவர்களை திருநெல்வேலி மாவட்டத்தில் 17.02.2021 அன்று நேரில் சந்தித்து தற்காலிக பணியாளர்களின் நிலை குறித்து விளக்கி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தற்காலிக பணியாளர்கள் திருமதி. அனுஜா, கவிதா, மாலதி மற்றும் தோழர் ஷிபு ஆகியோரும் திருநெல்வேலி மாவட்ட தோழர் வேதராஜ் மற்றும் உடன் இரண்டு தோழர்களும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மாநில இணை செயலாளர் தோழர் இசக்கியப்பன் மற்றும் உடன் இரண்டு தற்காலிக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.