2019 ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மற்றும் 2ம் இடம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் 06-04-2019 அன்று கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்பட்ட ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி மற்றும் கோலப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நாகர்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்கள் தலைமையிலும் மரியாதைக்குரிய குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி திரு. கோமதிநாயகம், மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம், கூடுதல் மாவட்ட நீதிபதி திரு. அப்துல் காதர், Permanent Lok Adalat Chairman திரு. மகிழேந்தி, தலைமை குற்றவியல் நடுவர் திரு. அருணாச்சலம், சார்பு நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நடுவர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட நீதிபதிகள் அனைவருக்கும் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
Apr 06