May 2021 archive

புரோவிடன்ஸ் ஹோம்

பெருஞ்சிலம்பு பகுதியிலுள்ள மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்திற்கு (புரோவிடன்ஸ் ஹோம்) தேவையான தேங்காய், சோப்பு பவுடர், டெற்றால், லைசால், அடல்ட் டயப்பர், பேஸ்ட், சந்திரிகா சோப் முதலிய பொருட்கள் ரூபாய் 5000/- அளவில் வாங்கி கொடுக்கப்பட்டது. நிகழ்வில் அண்ணன் ராஜன் தம்பி பெஞ்சமின் ஜோஸ் மற்றும் ஐவர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிதியுதவி செய்த ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏

2021ம் வருட மேஜை நாள்காட்டி

நமது மாவட்ட சங்கத்தால் நமது சங்க செயலாளர் தோழர் ஜோஸ் அவர்களின் சீரிய முயற்சியால் வடிவமைக்கப்பட்ட 2021ம் வருட மேஜை நாள்காட்டி ஒவ்வொரு நீதிமன்றத்திலும் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பயன்படும் வகையில் அனைத்து நீதிமன்ற ஊழியர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் அவரே சென்று சேர்த்துள்ளார். முயற்சிக்கு பாராட்டுக்கள்👏👏

கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு (27.11.2020)

தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று (27.11.2020) காலை 10 மணிக்கு கல்குளம் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் வைத்து சங்க கொடியேற்றி வைக்கப்பட்டு அதன்பின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் தோழர் இசக்கியப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் மாநில துணைத் தலைவர் தோழர் வேதமணி மற்றும் முன்னாள் மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் தோழர் சுரேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். …

Continue reading