செயற்குழு கூட்டம் 12.01.2021

கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் 12.01.2021 அன்று இரணியல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

புரோவிடன்ஸ் ஹோம்

பெருஞ்சிலம்பு பகுதியிலுள்ள மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்திற்கு (புரோவிடன்ஸ் ஹோம்) தேவையான தேங்காய், சோப்பு பவுடர், டெற்றால், லைசால், அடல்ட் டயப்பர், பேஸ்ட், சந்திரிகா சோப் முதலிய பொருட்கள் ரூபாய் 5000/- அளவில் வாங்கி கொடுக்கப்பட்டது. நிகழ்வில் அண்ணன் ராஜன் தம்பி பெஞ்சமின் ஜோஸ் மற்றும் ஐவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிதியுதவி செய்த ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏

2021ம் வருட மேஜை நாள்காட்டி

நமது மாவட்ட சங்கத்தால் நமது சங்க செயலாளர் தோழர் ஜோஸ் அவர்களின் சீரிய முயற்சியால் வடிவமைக்கப்பட்ட 2021ம் வருட மேஜை நாள்காட்டி ஒவ்வொரு நீதிமன்றத்திலும் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பயன்படும் வகையில் அனைத்து நீதிமன்ற ஊழியர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் அவரே சென்று சேர்த்துள்ளார். முயற்சிக்கு பாராட்டுக்கள்👏👏

கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு (27.11.2020)

தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று (27.11.2020) காலை 10 மணிக்கு கல்குளம் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் வைத்து சங்க கொடியேற்றி வைக்கப்பட்டு அதன்பின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் தோழர் இசக்கியப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் மாநில துணைத் தலைவர் தோழர் வேதமணி மற்றும் முன்னாள் மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் தோழர் சுரேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். செயலாளர் அறிக்கை மற்றும் பொருளாளர் அறிக்கை கூட்டத்தில் முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுக்குழுவை சிறப்பு செய்தனர்.
பொதுக்குழு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 🙏🙏

தமிழ் புலவர் மயூரம் திரு. வேதநாயகம் பிள்ளை – முன்னாள் நீதிமன்ற ஊழியர் – மரியாதை செய்த போது

மயூரம் திரு. வேதநாயகம் பிள்ளை இவர் ஒரு தமிழ் புலவர் என்பது நம் அனைவர்க்கும் தெரியும், தமிழின் முதன் நாவலான பிரதாப் முதலியார் சரித்திரத்தை எழுதியவரும் இவரே இவர் ஒரு நீதிமன்ற ஊழியர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ரெகார்ட் கீப்பர் ஆக பணிபுரிந்து, Thubash தற்போது Translator ஆக பதவி உயர்வு பெற்று பின்னர் மாயவரம் ஜட்ஜ் ஆகி பணி ஓய்வு பெற்றவர். இவருடைய சிலை மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ளது. இவர் 11.10.1826 அன்று பிறந்தார். அவருடைய பிறந்தநாள் இன்று. நமது முன்னோடி முன்னாள் நீதிமன்ற ஊழியர் திரு. வேதநாயகம் பிள்ளை அவர்களது சிலைக்கு மதுரை மாவட்ட மையத்தின் சார்பாகவும் மாநில மையத்தின் சார்பாகவும் இன்று (11-10-2019) மாலை 6.00 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கொரோனா தொற்று – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க கன்னியாகுமரி மாவட்ட மையத்தின் சார்பில் கபசுர குடிநீர் குமரி மாவட்ட நீதிமன்றங்களில் நீதித்துறை ஊழியர்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றபோது

கொரோனா தொற்று – உதவி கரம்

கொரோனா தொற்றால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நீதித்துறை ஊழியர்களிடமிருந்து முதல் கட்டமாக திரட்டப்பட்ட நிதி ரூபாய் 15,000/-லிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 1,000/- அளவில் அன்றாட தேவைகளுக்கான அரிசி, பலசரக்கு பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை வாங்கி அவர்களது இல்லத்திற்கு சென்று நேரடியாக வழங்கப்பட்டது. மேலும் அடுத்த கட்டமாக ரூபாய் 21,000/- ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்டு அதனுடன் சங்க நிதியிலிருந்து ரூபாய் 5,000/- சேர்த்து ரூபாய் 26,000/- அளவிலான அரிசி, பலசரக்கு பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆறுகாணி அருகே அமைந்துள்ள மலைவாழ் கிராமமான சிறுகடத்துக்காணி பகுதியில் உள்ள சுமார் 70 குடும்பங்களுக்கு ஆறுகாணி காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முக கவசம் வழங்கியது

நாகர்கோவில் சார்பு நீதிமன்ற ஊழியர் திருமதி. விஜயராணி அவர்களது முயற்சியால் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவரகள் பாதுகாப்பாக முக கவசம் அணிந்து பணியாற்ற அவராகவே முன்வந்து 15 முக கவசங்கள் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தயார் செய்து ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் திரு. மணிமுத்து கலந்து கொண்டார்.

1.2.2020 மற்றும் 2.2.2020 அன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நாகர்கோவில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் திரு கோபிநாத் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களது முன்னிலையில் பரிசு பெற்றபோது…

உலக அளவிலான உடல் வலுப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்ற நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற நகல் ஆராய்வாளர் திரு நிஷாந்த் மற்றும் இத்தாலி நாட்டில் வைத்து நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் சதுரங்க போட்டியில் கலந்து கொண்ட இரணியல் உரிமையியல் நீதிமன்ற தட்டச்சர் திரு சிவராஜ் அவர்களுக்கும் 26.01.2020 அன்று நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரால் கௌரவிக்கப்பட்டதோடுநமது மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது முன்னிலையில் நினைவு பரிசு வழங்கி அன்றைய தினமே சிறப்பித்தனர்.