தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் 26.12.2018 அன்று மாலை 6 மணியளவில் நாகர்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு வாயில் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட சிரஸ்தார்களுக்கு மாவட்ட மாறுதலை உடனடியாக கைவிட்டு மீண்டும் சொந்த மாவட்டத்திலேயே பணிஅமர்த்தவும் நீதித்துறையில் பல வருடங்களாக பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை 10(a)i பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வாயில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Dec 26