தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் 26.12.2018 அன்று மாலை 6 மணியளவில் நாகர்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு வாயில் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட சிரஸ்தார்களுக்கு மாவட்ட மாறுதலை உடனடியாக கைவிட்டு மீண்டும் சொந்த மாவட்டத்திலேயே பணிஅமர்த்தவும் நீதித்துறையில் பல வருடங்களாக பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை 10(a)i பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வாயில் …
December 2018 archive
Dec 22
சிவகங்கை மாவட்டத்தில்…
சிவகங்கை மாவட்டத்தில் நீதிபதியின் வாகனம் ஓட்டி விபத்தில் இறந்த அலுவலக உதவியாளர் திரு. சந்திரசேகர் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக நமது மாவட்ட ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூபாய் 27000/- திருவாரூர் மாவட்டத்தில் வைத்து 22-12-2018 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் காசோலையாக வழங்கப்பட்டது.
Dec 22
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால்…
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் தனது வீட்டை இழந்த அலுவலக உதவியாளர் முருகானந்தம் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிவாரண நிதி ரூபாய் 30350/- திருவாரூர் மாவட்டத்தில் வைத்து 22-12-2018 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் வழங்கப்பட்டபோது…