Author's posts
Jan 11
நீதிமன்ற ஊழியர்களால் பொங்கல் விழா
11.01.2020 அன்று குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் வைத்து நீதிமன்ற ஊழியர்களால் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Dec 04
ஆசிய அளவிலான உடல்வலுப் போட்டியில் கலந்து கொண்டு
ஆசிய அளவிலான உடல்வலுப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று நமது நாட்டிற்கும் நமது நீதித்துறைக்கும் பெருமை சேர்த்த நமது முதன்மை மாவட்ட நீதிமன்ற நகல் ஆராய்வாளர் திரு. நிஷாந்த் அவர்களுக்கு 04.12.2019 புதன் கிழமை மாலை கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசு மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி …
Nov 16
தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் 16.11.2019 சனிக்கிழமை நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தின் அருகே உள்ள வளனார் திருமண மண்டபத்தில் வைத்து காலை 10 மணியளவில் மாநில தலைவர் தோழர். செந்தில் குமார் அவர்களால் கொடியேற்றி துவங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் *நீதித்துறையில் பணியாற்றி காலமான தோழர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு சரியாக 10.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க செயலாளர் திரு. மங்கை மணவாளன் அவர்களால் வரவேற்புரை வழங்கி …
Nov 05
தூத்துக்குடி நீதித்துறை நடுவர்-1 திரு.நிலவேஷ்வரன் அவர்கள், அந்நீதிமன்ற சுருக்கெழுத்தர் திருமதி. சாரதி
தூத்துக்குடி நீதித்துறை நடுவர்-1 திரு.நிலவேஷ்வரன் அவர்கள், அந்நீதிமன்ற சுருக்கெழுத்தர் திருமதி. சாரதி என்பவரை,04.11.2019 அன்று மாலை தனது சேம்பரில் வைத்து, முறையாக தட்டச்சு செய்யவில்லை என்ற காரணத்திற்காக லெட்டர் பேடினை எடுத்து எறிந்ததில் திருமதி. சாரதியின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு ஐந்து தையல் போடப்பட்டுள்ள இந்த கொடூரச்செயலை கண்டித்து 05-11-2019 *மாலை 6.00 மணிக்கு நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தினை …
Sep 30
பணி நிறைவு பெற்ற மதிப்பிற்குரிய மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம் அவர்களுக்கு ..
(30-09-2019) பணி நிறைவு பெற்ற மதிப்பிற்குரிய மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம் அவர்களுக்கு தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பணி நிறைவு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
Sep 10
ஓணம் பண்டிகை
கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களிலுள்ள ஊழியர்கள் ஓணம் பண்டிகையை பூக்களால் அத்தமிட்டு கேரள பாரம்பரிய உடையணிந்து இன்று 10-09-2019 கொண்டாடி மகிழ்ந்தனர்.
Aug 28
அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு 24.08.2019 அன்று நாகர்கோவிலில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட மாநாட்டில் தோழர்கள் யோகேஸ்வரன், மங்கை மணவாளன், ஷிபு, அபிஷேக், ஐயப்பன் மற்றும் ஆவுடையப்பன் ஆகியோர் நீதித்துறை சார்பில் கலந்து கொண்டனர்.
Aug 15
கொட்டாரம் அருகிலுள்ள மனோலயா மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில்…
15.08.2019 அன்று கொட்டாரம் அருகிலுள்ள மனோலயா மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் காலை உணவு நமது ஊழியர்களால் வழங்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
Jul 30
நீதிபதி திரு. S. கருப்பையா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
30.06.2019 அன்று மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. S. கருப்பையா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களால் நடத்தப்பட்டது. விழாவினை மரியாதைக்குரிய மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம் அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. விழாவில் தலைமை குற்றவியல் நடுவர், சார்பு நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள், நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர், செயலாளர் மற்றும் முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் கன்னியாகுமரி மாவட்ட …
Jul 27
கடலூர் மாவட்டத்தில் வைத்து மாநில செயற்குழு கூட்டம்
20.07.2019 அன்று கடலூர் மாவட்டத்தில் வைத்து மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஐவர் மற்றும் ஷிபு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் மாநில சங்கத்திற்கு tnjeastatecentre.org.in” என்ற இணையம் பதிவு செய்யப்பட்டு அதை வடிவமைத்த கன்னியாகுமரி மாவட்ட System Analist தோழர். ஜாண் சுஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.